யூனிஸ் புயல் தக்குதலால் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து நாட்டில் யூனிஸ் புயல் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இங்கிலாந்து நாட்டு சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 32 ஆண்டுகளில் விசும் மிக மோசமான புயல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் யூனிஸ் புயல் தாக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாமில் இருந்து புறப்பட இருந்த 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.