மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கூடியிருந்த அவரின் ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் மாரிதாஸ்சை கைதுசெய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.