Categories
சினிமா

யுவன் நிகழ்ச்சியில் பரபரப்பு…. சுவர் இடிந்து விழுந்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாவை தவிர்த்து அவ்வபோது தனது ரசிகர்களுக்காக பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவ்வகையில் கோவை சின்ன மேடம் பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு யுவன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் யுவன் இசையை கேட்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பலர் கீழே விழுந்து கூட்டத்தில் சிக்கினர்.

அங்கிருந்த சுவர் மீது பலரும் ஏரி உள்ளே நுழைய முயன்ற சுவர் இடிந்து விழுந்து விபத்துக்கு ஏற்பட்டது. அந்த விபத்தில் பெண் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து மாணவிகள் என ஆறு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |