Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. எப்படி டவுன்லோடு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!

இந்திய பொருளாதார சேவைகள் மற்றும் இந்திய புள்ளியியல் சேவைகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 24 ஐஇஎஸ், 29 ஐஎஸ்எஸ் என மொத்தம் 53 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை யுபிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதற்கான விண்ணப்பபங்கள் ஏப்ரல் 26 வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பதாரர் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது பற்றிய தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போனில் குறுந்தகவல் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |