ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படத்தின் மியூசிக்கல் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் டிரைவர் ஜமுனா, பூமிகா, திட்டம் இரண்டு, மோகன்தாஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திட்டம் இரண்டு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் பாவல் நவகீதன், முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா ராம்பிரசாத், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Mystery unreveals tonight onwards of #ThittamIrandu
Streaming from tomorrow on @SonyLIV @SonyLIVIntl 😇👍👏#PlanBOnSonyLIV #ThittamIranduOnSonyLIV
From Team @aishu_dil @vinod_offl @dinesh_WM @vikikarthick88 @gokulbenoy @ECspremkumar @satish_composerhttps://t.co/acYfCIZL2O
— G Dhananjeyan (@Dhananjayang) July 29, 2021
சிக்ஸர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மினி ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மியூசிக்கல் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் நாளை ஜூலை 30-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் இந்த படம் ரிலீஸாகிறது.