சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபாரமான பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டையே வாயடைக்க செய்து விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 61 ரன்களை விளாச, இந்தியா கடைசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டேபிள் டாப்பர்களாக முடித்தது. அவரது பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூட பிரமிப்பில் ஆழ்ந்தனர், மேலும் அவரது ஃபார்ம் மற்றும் 360 டிகிரி திறனைக் கருத்தில் கொண்டு டி20 போட்டியில் அவரை வெளியேற்ற சிறந்த வழி எது என்று யோசித்து கொண்டிருகிறார்கள்..
MCGயில் சூர்யகுமார் அடித்ததில் இருந்து மிகவும் நம்பமுடியாத ஷாட்களில் ஒன்று, கடைசி ஓவரில் 6ஆவது -ஸ்டம்ப் லைனுக்கு நகர்ந்து முழு டாஸ் பந்தை ஃபைன்-லெக் திசைக்கு மேல் ஸ்கூப் ஷாட் அடித்தார். அந்த ஷாட் தான் செம வைரலாகி வருகிறது. சூர்யாவின் ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த ஷாட்டின் ரீப்ளே A ஸ்போர்ட்ஸில் காட்டப்பட்டதால், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், நட்சத்திர இந்திய பேட்டரை “வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்” என்று பாராட்டினார்.”
இதுகுறித்து அவர் கூறியதாவது, சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்.ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராகவும் அவர் ரன்களை அடிப்பது பார்க்க ஒரு விருந்தாக இருக்கிறது,” என்று கூறினார்.
மேலும் டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் மெல்போர்ன் போட்டியின் போது சூர்யகுமாருக்கு எதிரான பாகிஸ்தானின் வியூகத்தை அவர் பாராட்டினாலும், ஒரு பந்து வீச்சாளரைப் பொறுத்தவரை அத்தகைய பேட்டருக்கு எதிராக திட்டமிடுவது மிகவும் கடினம் என்று புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், டி20 போட்டிகளில் அவரை வெளியேற்ற சிறந்த வழி எது? அதாவது ஒருநாள் மற்றும் டெஸ்டில் நீங்கள் திட்டமிட்டு அவரை வெளியேற்றலாம். ஆனால் டி20யில், எப்படியும் பந்துவீச்சாளர் பேக்ஃபுட்டில் இருப்பார், யாராவது இந்த மாதிரியான ஃபார்மில் இருக்கும்போது அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். முந்தைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அவருக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டது என்று நினைக்கிறேன், அவரை ஷாட் பந்தை வீசினர்.. ஒருவேளை அதுதான் ஒரே வழி” என்று நினைப்பதாக அவர் கூறினார்.