Categories
சினிமா தமிழ் சினிமா

யார் பெரிய ஸ்டார்?…. வாயைக் கொடுத்து மாட்டிய தில்ராஜு…. அஜித் மேனேஜர் போட்ட திடீர் டுவிட் பதிவு…..!!!!!

தளபதி விஜய்யை விடவும் அஜித் பெரிய ஸ்டார் இல்லை. அதனால் வாரிசு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர் கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் தில்ராஜு கூறியது இப்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எனினும் துணிவு படத்தின் ப்ரோமோஷனில் அஜித் கலந்துகொள்ளபோவதில்லை என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது.

ஏனெனில் நல்ல படத்திற்கு அதுவேதான் விளம்பரம் என அஜித் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டரில், “அஜித் பைக் ரைடு சென்ற ஒரு போட்டோவை போட்டு “No guts no glory .!!!” என பதிவிட்டிருக்கிறார். தில்ராஜுவுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு பதிவை அவர் போட்டாரா..? என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.

Categories

Tech |