ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் பசுமை மண்டலத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் நாட்டில் உள்ள அன்பர் மாகாணத்தில் அமெரிக்கப்படைகளின் ராணுவ தளங்கள் மற்றும் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் கடந்த சில நாட்களாகவே ராக்கெட் மற்றும் மோட்டர் கொண்டு குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதல்கள் ஈரானின் ஆதரவுகளை பெற்ற ஹவுத்தி போராளிகளால் நடக்கபட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில் ஈராக் தலைநகரான பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் பசுமை மண்டலத்தை குறிவைத்து இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.