Categories
உலக செய்திகள்

யாரையும் பழி வாங்குவது நோக்கமில்லை…. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி….!!!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில்  சர்வதேச நாணய நிதிய மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  அவர்  கூறியதாவது. ஒரு நாட்டின் குற்றங்களை கண்காணித்து அவற்றை பின் தொடர்ந்து செல்லும் அமைப்புதான் அமலாக்கத்துறை. அந்த அமைப்பில் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக  இருந்தாலும் சரி குற்றம் முதலில் மற்ற அமைப்புகளால் கண்டறியப்படுகிறது.

அதன் பின்னர் தான் விசாரணை அமலாக்கத்துறைக்கு வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை போன்ற எந்த விசாரணை அமைப்புகளும் பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படவில்லை. மேலும் அமலாக்கத்துறை எந்த விவகாரத்திலும் முதலில் வருவதில்லை. நான் எந்த ஒரு தனிப்பட்ட வழக்குகள் மற்றும் யுத்திகளுக்கும் செல்ல விரும்பவில்லை ஆனால் சில விவகாரங்களில் அடிப்படை ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நுழையும் போது மிகத் தனித்து நிற்கும் செயல்பாடுகள் வெளியாகி வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |