பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியானா மகேஸ்வரி “யாரையும் நம்ப முடியவில்லை.” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஸ்வரி இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இவர் சின்னத்திரையில் தலைகாட்டவில்லை. இந்த திருமண வாழ்க்கை அவருக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தன. விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் .மகேஸ்வரிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் மகேஸ்வரி நிருபர்களிடம் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியவில்லை எனவும்,யாரையும் நம்ப மனம் வரவில்லை எனவும் கூறினார். மேலும் எனது தாய் என் கேரியர் என் மகன் மூன்றுமே எனக்கு இப்போது முக்கியம் என் மகனை ஏற்றுக்கொள்ளுமாறு ஒரு கணவன் கிடைத்தால் அதை பற்றி யோசிக்கலாம் என்றாலும் இது குறித்த பயம் என்னை விட்டு நீங்கவில்லை என கூறினார். மேலும் என்னுடைய தாயும் சிங்கிள் பெரண்ட் தான் என்று அழுதுகொண்டே கூறினார்.