சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின்பூஸ்டர் டோஸ்ஸை எவரெல்லாம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் அந்தந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசியினை செலுத்தி கொள்கிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர் குழு பொதுமக்களிடம் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தபடும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி inactivated கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ்ஸை போட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்புசி குழு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி குழுக்களின் தலைவர் கூறியதாவது, வயதானவர்கள் செலுத்திக்கொள்ளும் கொரோனா தடுப்பூசியின் திறன் குறைந்து கொண்டு வருவதாக ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது என்று கூறியுள்ளார்.