திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது, இதற்கு முன்னதாக நகர்ப்புறத்தில் நுழைந்த சிறுத்தை இதுவரையிலும் 6 நபர்களை தாக்கியுள்ளது.
இதன் காரணமாக காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் மீண்டும் திருமுருகன் பூண்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தை வந்துவிடுமோ என்று பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.