தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக முதல்வர், கொரோனா காலத்திலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் முதலீடு ஈர்த்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது தமிழ்நாடு. நேற்று சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிறுமி சாலையில் நடந்து செல்லும், போது தலைக்கவசம் அணிந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சிறுமி ஓட்டுநர் கையை கடித்து விட்டு தப்பித்தார்.
ஆட்டோ ஓட்டுநரும் தப்பித்துவிட்டார். உடனடியாக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்துள்ளார்கள். இந்த செய்தி அறிந்தவுடன் நான் உடனடியாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த சிறுமியை நேரில் அழைத்து, சிறுமியின் தைரியத்தை பாராட்டும் படி தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் நேற்று சிறுமியை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
காவல்துறைக்கு எனது பாராட்டுக்களை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் நேற்றைய நிகழ்வை சுட்டிக்காட்டி பேசினார். முதல்வரின் இந்த கருத்து பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு உள்ளது என்று நம்பிக்கையிட்டுள்ளது.