Categories
மாநில செய்திகள்

யாரும் நம்ப வேண்டாம்…! TNPSC தேர்வு முடிவுகள் குறித்த போலி Result….. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

TNPSC சார்பில் ஜூலை 2ஆம் தேதி பொறியியல் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.  அதற்கான முடிவுகள் குறித்த போலி பட்டியலை சிலர் இணையத்தில் பரப்பி வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. . இதனை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளும் தேர்வாணையத்தின் https://www .tnpsc.gov.in/ இணை ணையதளத்தில் மட்டும்தான் வெளியாகும்.

இப்படி சமூக வலைத்தளங்களில் வரும் போலி பட்டியலை யாரும் நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் அனைத்துமே தேர்வு முடிவு, தரவரிசையின்படியே நடக்கிறது. எனவே பொய்யான வாக்குறுதிகளை கூறி சட்டத்துக்கு புறம்பாக வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடமும் தேர்வுகள் மிக கவனமாக இருக்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |