Categories
அரசியல்

யாரும் கள்ள ஒட்டு போடல…!! எல்.முருகன் பேச்சு…!!

தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன பாஜகவினர் மற்றும் சில கட்சிகள் வாக்குப் பதிவில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர் அந்த வரிசையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் வாக்கு வேறு ஒருவரால் நல்ல ஓட்டாக செலுத்தப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ளவாக்காக வேறு ஒரு நபரால் போடப்பட்டுள்ளது.

இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?” என அவர் கேட்டுள்ளார். இந்த சூழலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அண்ணா நகர் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எழுத்துப் பிழை காரணமாக சிறிய தவறு நடந்து விட்டதாகவும் பின்னர் இந்த தவறு கண்டறியப்பட்டு அதன் பிறகு வாக்களித்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |