Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் ஆதரிக்க வேண்டாம்… எல்லாருமே எதிருங்க… ஸ்டாலின் போட்ட உத்தரவு…. டெல்லியில் அதிரடி காட்டிய திமுக ..!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட மசோதாவில்,  மோசமான சூழல் என்ன என்றால்…  மாநிலங்களில் உள்ள  மின்சார வாரியங்கள் கடன் வாங்கி கட்டமைப்பை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியாருக்கு….  இந்த கட்டமைப்பை பயன்படுத்தி மின்விநியோகம் செய்யலாம் என்று இந்த சட்டத்தில் கொண்டு வருகிறார்கள்.

இப்போது உரிமையாளர் ஒருவர் இருக்கிறார்… எந்த விதமான செலவும் செய்யாமல், எந்த கட்டமைப்பையும் உருவாக்காமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டமைப்பில் நாங்கள் விநியோகத்திற்கு எடுத்துக் கொள்வோம் என்றால்….  எந்தெந்த பகுதிகளில் அதிகமான நுகர்வோர் இருக்கிறார்கள், தொழிற்சாலைகள் இருக்கிறது, அங்கு அதிகமான பயன்பாடு இருக்கும்…

வீட்டினுடைய பயன்பாடுகள் நகர்ப்புறங்களில் அதிகமாக இருக்கும். இது போன்ற இடங்களில் தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்வதற்கான உரிமைகளை பெறுகின்ற போது…  நான் ஏற்கனவே சொன்னது போல…   விவசாயிகளாக இருக்கட்டும், குடிசை வீடுகளாக இருக்கட்டும் அல்லது 100 யூனிட் பயன்படுத்தக்கூடிய வீடுகளாக இருக்கட்டும், விசைத்தறியாக இருக்கட்டும்,

இந்த மாதிரி பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கக்கூடிய விதத்திற்கு மின்சார சப்ளை செய்வதற்கான அந்த நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில்தான் இந்த மின்சாரத்தை சீர்திருத்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று கழகத்தினுடைய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் உடைய உத்தரவின் அடிப்படையில் கழகத்தினுடைய பொறுப்பாளர் நாடாளுமன்ற குழுவின் உடைய தலைவர் முன்னாள் மத்திய அமைச்சர் திரு டி ஆர் பாலு அவர்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்து ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

ஸ்டாண்டிங் கமிட்டியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதில் இருக்கக்கூடிய உறுப்பினர் கடுமையான எதிர்ப்பை நிச்சயமாக பதிவு செய்வார்கள். இந்த மின்சார சீர்திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு வாபஸ் பெரும் வரை  திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து எங்களுடைய கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை பதிவு செய்வார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |