Categories
அரசியல் தேசிய செய்திகள்

”யாருனு சொல்லுங்க பாக்கலாம்”…. பாஜகவிற்கு சாவால் விடுத்த கெஜ்ரிவால்…!!

நாளை மதியம் 1 மணிக்குள் முதலமைச்சர் வேட்பாளர் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம் என பாஜகவிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவிற்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர், நாளை மதியம் 1 மணிக்குள் டெல்லி பாஜக வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், அந்த முதலமைச்சர் வேட்பாளரிடம் தான் விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளரை தான் அறிவிப்பதாக தெரிவித்த அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக கெஜ்ரிவால் இதனை தெரிவித்திருக்கிறார்

Categories

Tech |