Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருகிட்ட… நாங்கலாம் யாரு தெரியுமா..? சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து… சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் குரங்கிடம் மாற்றிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குரங்கு ஊரில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு போவர்கள் வருபவர்களை கடித்து குதறியும், நாய்களை துன்புறுத்தியும் அந்த குரங்கு அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி வாசிகளும் நாய்களும் அந்த குரங்கை கண்டால் அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கிராமத்தின் பள்ளி சுவரில் அமர்ந்து இருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென குரங்கு வந்துள்ளது. இதனால் சிறுவன் செய்வதறியாது சிலை போன்று அமர்ந்திருக்கிறான். இருப்பினும் அந்த சிறுவனை குரங்கு விடுவதாக இல்லை. சுமார் 7 நிமிடங்கள் வரை அச்சிறுவனை அச்சுறுத்தியும் முத்தம் கொடுத்தும் பல வித்தைகளை செய்து அவனை அசைக்க முயற்சி செய்தது.

இருப்பினும் சிறுவன் குரங்கின் சேட்டைக்கு  பிடிகொடுக்காமல் சிலை போல் அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து குரங்கு அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதைப்பார்த்த மற்றொரு நபர் அந்த நிகழ்ச்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |