கோவில் வாசலில் அமர்ந்து பா.ஜ கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை வள்ளி தேவசேனா மண்டப வளாகத்தில் பாதுகாப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யானை பாகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது அருந்தி இருந்ததாகவும், பொதுமக்கள் தயக்கத்துடன் வெளியே சென்றதாகவும் கூறி பா.ஜ கட்சியினர் நேற்று மாலை கோவில் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானையிடம் பாதுகாப்பாக இருக்காமல் மது அருந்திய சாதனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ கட்சியின் முன்னாள் மண்டல தலைவர் வேல்முருகன் உள்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் யானைப் பாகனிடம் காவல்துறையினர் நடந்து விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.