Categories
தேசிய செய்திகள்

யானையை மீட்க சென்ற போது… புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி… ஒடிசாவில் பரிதாபம்…!!!

ஒடிசாவில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுடன் சென்ற செய்தி புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் மகாநதி ஆறு ஓடுகின்றது. முண்டாலி என்ற பகுதியில் யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் செய்தி புகைப்படக்காரர் ஒருவரும் சென்றிருந்தார்.

யானை ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புக்குழு படகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று படகு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் செய்தி புகைப்படக்காரர் அரிந்தம் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து மீட்புக் குழுவினர் ஒருவர் ஆபத்தான நிலையில் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மூன்று வீரர்கள் சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |