Categories
சினிமா தமிழ் சினிமா

யானையால் “வாரிசு” படத்துக்கு வந்த புதிய பிரச்சனை….. விசாரணையில் வனத்துறை..!!

வாரிசு சூட்டிங்கில் சட்ட விரோதமாக யானையை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் ‘வாரிசு’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் ஷாம், சரத் குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தில் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, படக்குழுவினர் யானையை வைத்து வாரிசு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். யானையை வைத்து சூட்டிங் நடத்த உரிய அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமல் சமயபுரத்திலிருந்து யானை இவிபி (EVP) ஸ்டுடியோவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று தினம் வாரிசு திரைப்படத்திற்கு யானைகள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அதில் குறிப்பாக சமயபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஜெயா என்ற 24 வயதுள்ள யானை சட்ட விரோதமாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பாடல் காட்சியில் நடப்பதற்கான முயற்சி நடைபெற்றுள்ளது. 5 யானைகளில் ஒரு யானை சட்ட விரோதமாக அனுமதி பெறாமல் அன்படுத்தப்பட்டுள்ளது.

சினிமாவில் ஒரு யானையை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் அதற்கான விதிமுறைகள் எல்லாம் இருக்கின்றது. இரண்டு துறைகளில் அவர்கள் அனுமதி என்பது பெற வேண்டும்.. யானையை பயன்படுத்துவது என்றால் வனத்துறையில் அனுமதி பெற வேண்டும், பயன்படுத்தக்கூடியது எந்த உயிரினமாக இருந்தாலும் வனவிலங்கு நல ஆணையத்தில் அனுமதி என்பது பெற வேண்டும். ஆனால் அவர்கள் முறையான அனுமதி பெறாமல் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படப்பிடிப்பு காட்சியில் நடிக்க வைப்பதற்கான முயற்சி என்பது நேற்றைய தினம் நடைபெற்றது..

வனத்துறை அதிகாரியிடம் இது தொடர்பாக விசாரணை செய்தபோது, அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கஜ பூஜைக்காக யானைகள் கடந்த 11ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதி வரை திருச்சி சமயபுரத்திலிருந்து நாமக்கல் கொண்டு வருவதற்கான அனுமதி என்பது இருக்கிறது. அதேபோல 21ஆம் தேதி திரைப்படத்தில் கலந்து கொள்வதற்கான யானைகள் அனுமதி பெறப்படதாக கூறப்படுகிறது..

ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், 22ஆம் தேதி (நேற்று)ஜெயா என்ற திருச்சி சமயபுரத்தை சேர்ந்த யானையை அதன் உரிமையாளர் இவிபி நசரத்பேட்டை பகுதிக்கு கொண்டு வந்து அதனை விஜய் நடிக்க கூடிய வாரிசு திரைப்படத்தின் உடைய பாடல் காட்சியில் நடிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க விதிமுறைகளை மீறிய செயல் என்றும், வாரிசு சூட்டிங்கில் சட்ட விரோதமாக யானையை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் யானைக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டனவா? எனவும் விசாரிக்கப்படும் என்றும், தற்போது தேவையான ஆதாரங்கள் ஆவணங்கள் எல்லாம் சேகரிக்க கூடிய பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட சமயபுரம் ஜெயா யானை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது..

Categories

Tech |