Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

யாசகம் பெற்ற ரூ.50 லட்சம் பணம்…. என்ன செய்தார் தெரியுமா…? தமிழ்நாட்டின் பெருமை இவர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனக்கு யாசகத்தின் மூலமாக கிடைத்த பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கைத் தமிழர் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண நிதிகளுக்காக 2010 ஆம் வருடம் முதல் வழங்கி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யாசகம் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பூல் பாண்டியன் தற்போது கிடைத்த யாசகத்தில் பத்தாயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் முப்பது வருடங்களாக மும்பையில் பொது சேவையிலிருந்து 2200 மரங்களை நட்டு உள்ளேன். அதன் பிறகு 2010ல் தமிழ்நாட்டிற்கு வந்தேன். இங்கு பல மாவட்டங்களிலும் யாசகம் பெற்று 400 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி செய்துள்ளேன் .பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கினேன். இலங்கைக்கு பிரச்சனை வாழ்ந்த போது இலங்கைக்கும் நன்கொடை கொடுத்தேன். நான் தனியாகவே இந்த சேவையை செய்து வருகிறேன்.

கடந்த 2010 முதல் இதுவரை 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை தமிழக அரசின் பல்வேறு நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாக கூறியுள்ளார். வசதியானவர்கள் கூட சிலருக்கு உதவி செய்ய மறுக்கும் இந்த காலத்தில் தூத்துக்குடி சேர்ந்த இந்த யாசகர் தன்னுடைய அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை பொதுமக்களுக்கு உதவும் விதமாக மன நிறைவோடு கொடுக்க வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |