நடிகை சினேகா இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து அசத்திய நடிகை சினேகா. இவரும், நடிகர் பிரசன்னாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் சில திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
அந்த வகையில் தனது மகளின் இரண்டாவது பிறந்தநாள் விழாவில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து தற்போது தனது அம்மா மற்றும் அக்காக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.