ஸ்பிரிட்னி ஸ்பியர்ஸ் 2016ஆம் ஆண்டு சிங்கிள் ஸ்லம்பர் பார்ட்டி (single Slumber Party) இசை ஆல்பத்தின்போது, சாம் அஸ்கரி (Sam Asghari) என்பவரை சந்தித்தார். தற்போது காதலித்துவரும் இருவரும் ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர் . இந்த நிலையில், அமெரிக்க பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் கர்ப்பம் அடைந்திருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “நான் கர்ப்ப பரிசோதனை எடுத்துக் கொண்டேன். ம்ம்ம்ம்ம். ஆம்.. என்னுள் குழந்தை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் எழுத்துக்கள் அவரது ரசிகர்களுக்கு குழப்பத்தை விளைவித்தன. ஸ்பிரிட்னி ஸ்பியர்ஸ், “தம்முடைய வயிறு பெரிதாக உள்ளதென்றும், இது உணவினால் ஏற்பட்ட கர்ப்பம்” என்றும் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.