மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் மாவட்டம் கக்மாரியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் போலீசிடமிருந்து இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஒரு விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய, வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள முகாமில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள்.
அப்போது வீரர்கள் இருவருக்குமிடையே சம்மன் விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் சக வீரர் இன்னொருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படை முகாமில் இரண்டு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.