Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் இருவர் பலி…. குமரியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்கடவு பகுதியிலிருந்து ரப்பர் மரம் தடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நெட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தில் இறந்த வாலிபர்கள் களியக்காவிளை பகுதியை சேர்ந்த செய்யது அலி மற்றும் சிபின் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |