திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு சென்ற லாரி பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை அருகே வந்தபோது முன்புறம் சாம்கிறிஸ்டியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் சாம்கிறிஸ்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குகனேஸ்வரன் பலத்த காயமடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது பற்றி தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்கிறிஸ்டியன் உடலை கைப்பற்றி திருவையாறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.