Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு ஆட்டோ…. “தூக்கி வீசப்பட்ட இருவர்”….சோகம்…!!!!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள்.

இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அவருக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |