Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி வட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான அசோக் குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான குகன்(18) என்பவருடன் சிதம்பரத்திலிருந்து காரில் புவனகிரி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலுவைபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சிதம்பரம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் இவர்களது கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர புளிய மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் அசோக் குமார் மற்றும் மோட்டார் சைக்கிளில் உள்ள புருஷோத்தபன்(41) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குகனையும், புருஷோத்தமனின் தங்கை புனிதாவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |