மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முரளியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார் கார் ஓட்டுனரான ஜெகன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.