வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள காமாளையம் 4-வது தெருவில் பாலாஜி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பாலாஜி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நண்பரான இஸ்மாயில் என்பவரை அழைத்துக் கொண்டு பாலாஜி மோட்டார் சைக்கிளில் ஓடையில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென உந்தன் நான்கு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலாஜி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலி, இஸ்மாயிலிடம் இருந்த செல்போன், 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.