Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்” திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்து  நண்பரான சேது  என்பவருடன் சேர்ந்து  உடையார்விளை சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சக்திவேலின்  கட்டுப்பாட்டை இழந்து  மோட்டார் சைக்கிள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |