பிரதமர் மோடி முதலில் விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கத்தினர் ஒன்றுதிரண்டு டெல்லியில் மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை.
பிறகு இந்த பிரச்சனையை மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே தற்போது வரை இருந்து வருகிறது. இந்நிலையில் வருகிற 24ம் தேதி ஜம்மு காஷ்மீரில் அங்குள்ள கட்சித் தலைவர்களை பிரதமர் மோடி காஷ்மீர் பிரச்சினைகள் குறித்து சந்திக்கவுள்ளார். முதலில் விவசாய சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்தித்து அதற்கான ஒரு தீர்வை அளித்துவிட்டு அதன்பின் தங்களை சந்திக்கலாம் என காஷ்மீர் தலைவர்கள் மோடியை கேட்டுக்கொண்டால் பிரமாதமாக இருக்கும் என சமூக செயற்பாட்டாளர் சுப உதயகுமார் ட்விட் செய்துள்ளார்.