பெரியாரும், அண்ணாவும் நல்வழி படுத்துனார்கள் என காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் பெரியாரும், அண்ணாவும் சொல்லி கொடுத்தது வேறு என சொல்லுறீங்க ? என்ன சொல்லி கொடுத்தாங்க பெரியாரும், அண்ணாவும். வெளிநாட்டில் சென்று பிச்சை எடுக்க சொன்னார்களா ? கடல் கடந்து வந்த தீவிரவாதிகளை ஆதரிக்க சொன்னார்களா ? நல்வழி படுத்துனார்கள் பெரியாரும், அண்ணாவும்.
பேரறிஞர் அண்ணா சொல்லி கொடுத்தது வேறு, பிரபாகரன் என்ன சொல்லி கொடுத்திருக்கிறாரு உங்களுக்கு, எங்க கிட்ட மண்ணில் வீரர்கள் இருக்கிறார்கள். வீரபாண்டிய கட்டமொம்மன், கப்பலோட்டிய தமிழன், பகத்சிங்குடைய வாரிசு நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு எதற்கு வெளிநாட்டில் இருக்கும் தலைவன், உள்நாட்டிலேயே நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள் கொடி காத்த குமரன் இருக்கிறார். நம்ம மண்ணில் இல்லாத தலைவர்களா ?
இவர்கள் இங்கு இருந்தும் எங்கிருந்தோ இறக்குமதி செய்திருக்கிறார்கள் தலைவர்களை… மீண்டும் எச்சரிக்கையாக சொல்கிறோம்.எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது, நமது அரசியலமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அம்பேத்கர் எழுதி கொடுத்துள்ளார். இதை மதிப்பவர்கள். நீங்கள் இதை மோடி மாதிரி மிதிக்கணும் என்று நினைத்தால் வேறுவித விளைவுகளை சந்திக்க நேரிடும் இது எச்சரிக்கை என தெரிவித்தார்.