சபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்ட கையெழுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த ட்ரம்பை பிரதமர் மோடி கட்டியணைத்து , கைகுலுக்கி வரவேற்றார். இந்திய பாரம்பரிய முறைப்படி அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து விரைந்த ட்ரம்ப் சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார். அவரை பிரதமர் மோடி சால்வை அனுவித்து வரவேற்ற மோடி ட்ரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கதர் ஆடை வழங்கினார். பின்னர் அங்கிருந்த காந்தி போட்டோவுக்கு மோடி ,ட்ரம்ப் மாலை அனுவித்து மரியாதை செலுத்தியதோடு அசிரமத்தில் இருந்த ராட்டை மனைவியுடன் ட்ரம்ப் சுற்றி வியந்தார்.
இதையடுத்து அங்கிருந்த பார்வையாளர்களை கையேட்டில் அதிபர் ட்ரம்ப் என் நல்ல நண்பன் மோடி என்றும் , இந்த பயணம் அற்புதமானது என்று தனது கையெழுத்தை ட்ரம்ப் பதிவிட்டார். ட்ரம்பின் இந்த கையெழுத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.