Categories
தேசிய செய்திகள்

மோடி ஆட்சி முடியும் வரை போராட்டம் தொடரும்… விவசாயிகள் தலைவர் ஆவேசம்…!!!

பிரதமர் மோடியின் ஆட்சி முடியும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 100 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் வரையில்  எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை போராட்டக்களத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் டிராக்டர் பேரணி, உண்ணாவிரதம் மற்றும் பொது முடக்கம் என பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் பல்வேறு விவசாய சங்கங்கள் மையமிட்டுள்ள நிலையில், போராட்டம் 100வது நாளை கடந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் பிரதமர் மோடியின் ஆட்சி காலம் முடியும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் தலைவர் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்திற்கு மதச் சாயம் பூச முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |