விவசாயிகளுக்கு எதிராக உள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள ஹரியானா மாநில பாஜக அரசு மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புது தில்லி காவல்துறையின் விவசாயிகள் விரோத போக்கை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மோடி அரசே, மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெறு”என்று அவர் கூறியுள்ளார்