Categories
அரசியல்

“மோடியை பார்த்தா எனக்கு செம காமெடியா இருக்கு…!!” கிண்டல் செய்த ராகுல் காந்தி…!!

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தி சரியாக லோக்சபாவுக்கு வருவதில்லை, விவாதங்களை கவனிப்பது இல்லை, என பல குற்றங்களை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி உத்தரகாண்ட் பிரச்சாரத்தின் போது கூறியதாவது, “மோடி எப்போதும் காங்கிரஸை பற்றியே சிந்தித்து வருகிறார். எனக்கு மோடியைப் பார்த்து துளியும் பயம் இல்லை மாறாக அவருடைய முரட்டு பிடிவாதத்தை பார்த்து சிரிப்புதான் வருகிறது.

ராகுல்காந்தி எதையும் கவனிப்பது இல்லை என அவர் கூறியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..? அமலாக்கப்பிரிவு சிபிஐ என எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.! அதை நான் கண்டு கொள்வதும் இல்லை. நான் ஏன் மோடி சொல்வதைக் கேட்க வேண்டும்.? ரூபாய் நோட்டு செல்லாது என கூறி பொருளாதாரத்தையே சீரழித்தார் மோடி. அதோடு ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை கொண்டுவந்து ஏழை மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.!” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |