கடந்த வருடம் ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவிஏற்ற நப்தாலி பென்னெட் இம்மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார். அவருக்கு சென்ற மாதம் 28ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நப்தாலி பென்னெட் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அதாவது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருதலைவர்களும் பேசி கொண்டனர். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததற்காகவும், இறந்தவர்களுக்கு அனுதாபங்களை வெளியிட்டதற்காகவும் மோடியை நப்தாலி பாராட்டினார். இதற்கிடையில் பென்னெட்டின் இந்திய பயணம் எப்போது என்பது தொடர்பாக தகவல் வெளியிடப்படவில்லை.