பிரதமர் மோடியின் தோல்விக்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என குறிப்பிட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் பாஜாகா தோல்வியடைந்து விட்டது எனவும், எல்லை பாதுகாப்பிடம் சீனாவின் அத்துமீறலை தட்டிக்கேட்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது எனவும், குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உலவு பார்க்கப்பட்டனர் எனவும், வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் வழக்காரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது எனவும், இத்தனை தோல்விகளை பாஜக சந்திப்பதற்கு தான் எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லையில் சீன வீடுகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியதையும் அவர் பதிவிட்டுள்ளார்.