Categories
தேசிய செய்திகள்

“மோடியின் கொடுமை ஆட்சி”…. ராகுல் காந்தி டுவிட் பதிவு….!!

இந்திய தலைநகரமான டெல்லியின் எல்லையில் மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் வருகின்ற 26ம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. ஆனாலும் விவசாயிகளின் நிலைமையைக் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “விவசாயி பெயருக்கு முன்னால் தியாகி என்று குறிப்பிடப் பட வேண்டிய நிலைமை வந்து விட்டது. இது மோடி அரசின் கொடுமை எல்லை மீறி விட்டது என்பதை தெரிவிக்கிறது. நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளின் சத்யாகிரகத்திற்கு வணக்கம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |