செய்தியாளர்களிடம் பேசிய பாஜக நாராயணன் திருப்பதி, கடந்த வருடம் ஜனவரி 16ஆம் தேதியன்று கொரோனா தொற்றை தடுப்பதற்கு உண்டான தடுப்பூசிகளை இந்தியாவில் நாம் செலுத்த துவங்கி இதே நாளில் ஒரு மிக அற்புதமான, மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது இந்தியா. உலக நாடுகளிலேயே இவ்வளவு தடுப்பூசிகளை தயாரித்து அதை மக்களுக்கு செலுத்தி வெற்றிகரமாக இந்த தொற்றுநோயை சமாளித்து வருகிறோம் என்று சொன்னால்,
அது நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுடைய ஒரு டெடிகேஷன் என்று சொல்வோம், அந்த அளவிற்கு தன்னலமில்லாத அவருடைய அர்ப்பணிப்பு அதன் காரணமாகத்தான் இந்த ஒரு வருடத்தில் 157 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை நாம் செலுத்தி இருக்கிறோம். இதுவரையில் 93 விழுக்காடு பேர் முதல் தவணையும், 69 விழுக்காடு பேர் இரண்டாவது தவணையும் செலுத்தி இருக்கின்றனர்.
உலகத்திலேயே மிக அதிக அளவில் குறுகிய காலகட்டத்தில் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. உலகம் முழுவதும் மிக பயங்கரமான இந்த கொரோனா தொற்றினுடைய பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்க கூடிய நாடுகளில் இருந்து சற்றே மாறுபட்டு இங்கே தொற்றுகள் அதிகரித்துக் கொண்டு இருந்தாலும் கூட, இந்தத் தடுப்பூசிகளினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாத வண்ணம், நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட…. 90 சதவீதத்திற்கும் மேலாக நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி, நம்முடைய நாட்டு மக்களை பாதுகாத்து இருக்கிறது மத்திய ஜனதா கட்சியின் உடைய அரசு.
அது மட்டுமல்ல இங்கிருந்து 150 நாட்களுக்கும் மேலாக 13 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை நாம் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்து, நாம் மட்டுமல்ல உலகத்தில் இருக்கக்கூடிய மற்ற சிறிய நாடுகளிலும் கூட நம்முடைய இந்தியாவினுடைய பங்கு இருக்க வேண்டும், அந்த நாட்டு மக்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் அனுப்பியிருக்கிறோம். கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகள் பல தடுப்பூசிகளை பதுக்கி அவர்களுக்கு தேவை இல்லை என்னும் பொழுது மற்ற சிறிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
அங்கே அந்த தடுப்பூசிகளை அவர்களால் உபயோகிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இந்தியா அனுப்புகின்ற தடுப்பூசிகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அந்தந்த நாட்டு மக்களுடைய உயிர் பாதுகாக்கப்படுகிறது என்பது ஒரு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. இந்தியா உலகத்திற்கு வழிகாட்டியாய் ஆபத்பாந்தவனாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இதற்கும் காரணம் நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் என பெருமிதம் கொண்டார்.