சமந்தாவின் பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடிதந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். தற்பொழுது சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்ற நிலையில் டிசம்பர் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சமந்தா இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் போட்டோ ஷூட், வொர்க் அவுட் செய்யும் வீடியோ, போட்டோக்கள் என பகிர்ந்து வருகின்ற நிலையில் அண்மையில் தனது செல்லப் பிராணிகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர் கடைசியில் சமந்தா நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப் போகிறார் என கமெண்டில் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த சமந்தா என்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்துக் கொள்வேன் என பதிலடி தந்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகின்றது.