Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாக்குலின் பெர்னாண்டசை அறிமுகம் செய்த பெண்…. அதிரடி கைது….!!!!!

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர்களை ஏமாற்றி ரூபாய்.200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைதாகி சிறையில் இருக்கிறார். மேலும் இந்த மோசடிப் பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அமலாக்கத்துறையானது வழக்குப்பதிவு செய்தது. இவ்விவகாரத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்து இருந்தது.

இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டசை, சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகப்படுத்திய பிங்கி ராணி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறை செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா கூறியதாவது “இவ்வழக்கில் மும்பையை சேர்ந்த பிங்கிராணிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின் அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

Categories

Tech |