தற்போது ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. அதன்படி ஆதாரிலுள்ள பாதுகாப்பான அம்சங்களில் மாஸ்க்டு ஆதார்கார்டு ஒன்றாகும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு வாயிலாக , உங்களது ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இப்போது மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் கார்டை எவ்வாறு பதிவிறக்கம் பண்ணுவது என்று நாம் தெரிந்துகொள்வோம்.
# முதலாவதாக ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று “ஆதாரைப் பதிவிறக்கு” என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
# இதையடுத்து VID (அ) Enrollment ID (அ) Aadhaar Card என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து Masked Aadhaar என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# அதன்பின் Request OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
# பின் உங்களது ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிடவும்.
# அடுத்ததாக ஆதார் பதிவிறக்கத்தினை கிளிக் செய்யவும்.
# அதனை தொடர்ந்து மாஸ்க்டு ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்யப்படும்.