மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரபு, அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி, ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ரோனி ராஃபெல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் புதிய டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.