Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி” தொழிலதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் போது மொரிசியஸ் நாட்டிற்கு முகாகவசம் ஏற்றுமதி செய்து அதற்காக 3,340 டாலர் பணத்தை வங்கி வரைவோலையாக பெற்று கொண்டார்.

இந்நிலையில் ரமேஷ் குமார் என்னை தொடர்பு கொண்டு வங்கியில் அளிக்கப்பட்ட வரைவோலை நகலை காண்பித்து ரிசர்வ் வங்கியில் பணத்தை டாலரில் இருந்து இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு 17 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டார். அதனை நம்பி 16 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை ரமேஷின் வங்கி கணக்கில் நான் செலுத்தினேன். அதன் பிறகு அவர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். எனவே எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |