அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருட்களை வாங்கி வருவதால் இவ்வாறு தள்ளுபடி காலங்களில் நல்ல பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் விற்பனை தளத்தில், நேற்று முதல் பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது. இந்த விற்பனையானது இன்றுடன் முடிவடைகிறது.
இந்த இரு நாட்களிலும் எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள் வரை பல்வேறு பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் சாம்சங் கேலக்சி M11 ஸ்மார்ட் போனுக்கு ரூ .5000 தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999க்கு விற்பனையாகிறது. ரூ.7,999 மதிப்புள்ள ரியல்மி C11 ரூ.6,699 க்கு விற்க்கப்படுகிறது. மேலும் விவோ Y 1 போனுக்கு ரூ.2,500 தள்ளுபடியுடன் ரூ.9,490க்கு விற்கப்படுகிறது.