Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட் மீது இருசக்கர வாகனம் மீது மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தினமும் கடைக்கு சென்று விட்டு மொபட்டில் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சினேகா கோவிந்த குடியிலிருந்து தனது தந்தையுடன் மொபைட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரனின் மொபட்டின் மீது பயங்கரமாக மோதியது.  இந்த விபத்தில் மணிமாறன் மற்றும் ராஜேந்திரன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் சினேகா ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சினேகா, விக்னேஷ் ஆகிய 2 பேருக்கும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வலங்கைமன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிமாறன், ராஜேந்திரன் ஆகிய 2 பேரின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |