Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொத்தம் 22.16 லட்சம் ரூபாய் ….அமைச்சரின் அதிரடி செயல் …. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!

பால் உற்பத்தியாளர்களுக்கு 22.16 ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையா, அமைச்சர் ஆர். கே .பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சர் நாசர் 22.16 லட்ச ரூபாயை மதிப்பீட்டில்  52 பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் உதவி  வழங்கியுள்ளார். அதன்பின் அமைச்சர் நாசர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த ஆண்டை விட தற்போது 41 லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் 28 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |